தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவமும், தாய்-சேயை பாதுகாக்கும் சமூகத்தின் கடமையும்...

"ஆரோக்கியமான உலகத்தைப் படைக்க தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிப்போம்” என்பதே 2020 தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவமும், தாய்-சேயை பாதுகாக்கும் சமூகத்தின் கடமையும்...
தாய்ப்பால் வாரம்
  • Share this:
"ஆரோக்கியமான உலகத்தைப் படைக்க தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிப்போம்” என்பதே 2020 தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால். இந்த தாய்ப்பாலின் அவசி யத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. உளவியல் ரீதியாக உடன் இருப்பவர்களின் துணையும் தேவைப்படுகிறது. எனவேதான், உலக தாய்ப்பால் செயல் திட்ட கூட்டமைப்பு (வாபா),  ஆரோக்கியமான உலகத்தைப் படைக்க தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிப்போம் என்பதை நடப்பு ஆண்டின் கருப்பொருளாக அறிவித்துள்ளது.


முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால்

குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த காலத்தில் குழந்தைக்கு நேரடியாக பால் கொடுத்தால் பால் சுரப்பு குறையாமல் இருக்கும்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு அளிக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சுத்தமான டம்ளரில் எடுத்துவைத்துவிட்டு செல்லலாம். அறை வெப்பநிலையில் 6 மணி நேரம் வரை அந்த பாலை வைத்திருக்கலாம்.குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சங்கு அல்லது ஸ்பூன் மூலம் உடன் இருப்பவர்கள் அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.

கொரோனா தொற்று இருப்பவர்களும் குழந்தைகளுக்கு தாய்பால் தரலாம், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading