• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • Breaking: உத்ரா கொலை வழக்கு: கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள், 17 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் அபராதம்!

Breaking: உத்ரா கொலை வழக்கு: கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள், 17 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் அபராதம்!

உத்ரா - சூரஜ்

உத்ரா - சூரஜ்

உத்ரா கொலை வழக்கில் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  விஷம் மூலம் காயம் ஏற்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆதாரங்களை அளிக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

 • Share this:
  கேரளாவில் வரதட்சனைக்காக தனது மனைவி உத்ராவை  பாம்பு மூலம் கணவன்  சூரஜ் கடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் சூரஜ் குற்றவாளி என கடந்த 11ம் தேதி கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 2 ஆயுள் தண்டனை, 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவை நிகழ்ந்த உத்ரா படுகொலை சம்பவம் நாட்டையே உலுங்கியது. வரதட்சணை விவகாரம் இந்த கொலைக்கு பின்புலமாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுமார் 1000 பக்கம் குற்றப் பத்திரிக்கை  நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இந்த வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பளித்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற, சூரஜ் குற்றவாளி என்று அறிவித்தது.

  சூரஜுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி,  சூரஜுக்கான தண்டனை விவகரங்களை நீதிபதி மனோஜ் அறிவித்தார். கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  விஷம் மூலம் காயம் ஏற்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆதாரங்களை அளிக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

  17 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த பின்னர் இரட்டை ஆயுள் தண்டனை தொடங்கும். இதனுடன் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  வழக்கின் பின்னணி

  கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ராவுக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.  வங்கி அதிகாரியான  சூரஜ் பத்தனம்திட்டா அரூர் பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவந்தார்.

  இதையும் படிங்க: கோவிலில் பூஜை: தீட்சை பெற்று தயாராக இருக்கும் 22 பெண் அர்ச்சகர்கள்!


  இந்நிலையில், கடந்த அண்டு மே 7ம் தேதி தனது தாயாரின் வீட்டில் உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். ஏற்கனவே ஒருமுறை படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவரை பாம்பு கடித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் குணமடைந்தார்.

  மீண்டும் பாம்பு கடித்து அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2வது மாடியில் உள்ள அந்த அறையில் ஏ.சி. உள்ளதால் ஜன்னலை திறக்கக்கூட வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது விஷப் பாம்பு எப்படி வந்தது என போலீசார் குழம்பி போனார்கள். தூக்கத்தில் இருந்து எப்போதுமே தாமதமாக எழுந்திரிக்கும் சூரஜ், மனைவியை பாம்பு கடித்த தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து அறையை விட்டு சென்றதால் போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்பியது.

  வரதட்சணைக்காக கொலை:

  போலீசாரின் விசாரணையில் வரதட்சணைக்காகதான் உத்ராவை கொன்றுவிட்டதாக சூரஜ் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை பாம்பை ஏவி கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பிய நிலையில், இந்த முறை தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்து பின்னர் பாம்பு மூலம் அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.

  மேலும் படிக்க: 2 - 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலாம்: மத்திய அரசுக்கு மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை!


  திருமணத்தின்போது 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை,  சொத்து, கார்  போன்றவற்றை வரதட்சணையாக சூரஜ் பெற்றுள்ளார். உத்ரா குடும்பத்திடம் இருந்து மேலும் வரதட்சணை பெற அவர் முயன்றுள்ளார். இது பலன் அளிக்காமல் போகவே உத்ராவை பாம்பு மூலம் கடிக்க வைத்து கொன்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: