Live updates: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

  • News18 Tamil
  • | July 01, 2022, 21:00 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:53 (IST)

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

    12:25 (IST)

    மகாராஷ்ட்ராவில் ஜூலை 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

    மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 3, 4-ம் தேதி நடைபெறுகிறது.  ஜூலை 3- ம் தேதி சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.  மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்ற நிலையில் சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

    12:15 (IST)

    வந்தவாசியில்  தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே  மோதல்

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள தனியார்  கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.