முகப்பு /செய்தி /இந்தியா / ஒரே நாளில் 60 செமீ கொட்டிதீர்த்த கனமழை... பிரேசில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 36 பேர் பலி!

ஒரே நாளில் 60 செமீ கொட்டிதீர்த்த கனமழை... பிரேசில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 36 பேர் பலி!

பிரேசிலில் கடும் வெள் பாதிப்பு

பிரேசிலில் கடும் வெள் பாதிப்பு

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaRio Di JaneiroRio Di Janeiro

தென்னமெரிக்க நாடான பிரேசிலில் கனமழை வெள்ளபெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக அங்கு கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் சாவ் போலோ மாகாணத்தில் கொட்டிய மழையில் 228 வீடுகள் சேதமடைந்தன. கடற்கரையை ஒட்டிய 338 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சாவ் போலோ நகரில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில் அந்த மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வழக்கத்தை விட இரு மடங்கு மழை இம்மாதம் பெய்துள்ளதாகவும், சாவ் செபாஸ்டியோ என்ற பகுதியில் 24 மணிநேரத்தில் 60 செமீ மழை கொட்டி தீர்த்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்வதாக அந்நாட்டின் அதிபர் லூசிஸ் இனாசியோ தெரிவித்துள்ளார். மேலும் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அவசர தேவைக்காக 1.5 மில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பிரேசில் நாட்டில் இது திருவிழா காலம் தலைநகர் ரியோ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வேடமணிந்து விழா கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக சாவ் செபாஸ்டியோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கத்துக்கு மாறான அளவில் திடீரென மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்தாண்டும் இது போன்று ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

First published:

Tags: Brazil, Disasters, Flood, Heavy Rainfall