ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரமாண உணவுகள்... மார்க்கெட்டிங் செய்த ஹோட்டலுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

பிரமாண உணவுகள்... மார்க்கெட்டிங் செய்த ஹோட்டலுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

பெங்களூரு உணவகங்கள்

பெங்களூரு உணவகங்கள்

உங்கள் உணவை அழகுபடுத்த எந்த ஒரு பிராமண வழியும் இல்லை. உங்கள் உணவகத்தை "பிராமணர்" என்று நீங்கள் அழைக்கும்போது, ​​அது ஒரு ஜாதி சமிக்ஞையே தவிர வேறொன்றுமில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

@peeleraja எனும் ட்விட்டர் பயனர் ஒருவர் பெங்களூருவில் சாதி பெயர்கள் இணைக்கப்பட்ட உணவகங்களை ஸ்விக்கி , ஸ்மோடோ உணவு பட்டியலில் உள்ளிட்டிருக்கும் உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

உணவகங்களுக்கான அடையாளங்களாக ஜாதிக் குறியீட்டு குறிச்சொல் போடப்படுகிறதா? உணவுகளில் கூட தங்கள் சாதிய உணர்வை வெளிப்படுத்த முயல்கின்றனரா? என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் ட்விட்டரில் இப்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விஷயங்களை இப்போது சமூக ஊடகங்களிலும் செய்ய முனைவதால்,  சர்ச்சை ஏற்பட்டது.

உணவகங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ட்விட்டர் பயனர், “குறிப்பிட்ட பிராமண உணவுகள் என்று எதுவும் இல்லை. மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை இன்று நாடு முழுவதும் பல பிராமணர்கள் சாப்பிடுகின்றனர். சமைக்கின்றனர். உங்கள் உணவை அழகுபடுத்த எந்த ஒரு பிராமண வழியும் இல்லை. உங்கள் உணவகத்தை "பிராமணர்" என்று நீங்கள் அழைக்கும்போது, ​​அது ஒரு ஜாதி சமிக்ஞையே தவிர வேறொன்றுமில்லை." என்று பதிவிட்டுள்ளார்.

பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின் எக்ஸ்பிரஸ், அம்மாஸ் பிராமின் கஃபே, பிராமின் டிஃபின்ஸ் & காபி போன்ற பெயர்கள் Zomatoவில் உள்ளிட்டு இருப்பதை அதிகம் காணமுடுகிறது. ஸ்விக்கியிலும் பிராமின்ஸ் உபஹர், பிராமின்ஸ் ஸ்பெஷல் புளியோகரே, பிராமின்ஸ் கிச்சன் உள்ளிட்ட ஏராளமான உள்ளீடுகள் இருக்கின்றன.

2018 ஆம் ஆண்டு இதே போன்றதொரு நிகழ்வில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சுத்தமான பிராமண மதிய உணவுப் பெட்டி சேவையை விளம்பரப்படுத்தத் தொடங்கியது. வழக்கறிஞரும் ஆர்வலருமான டாக்டர். பி கார்த்திக் நவயானா மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் ‘தூய பிராமண மதிய உணவுப் பெட்டி சேவை’ என்ற விளம்பரப் பதாகையின் படத்தை வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் அக்‌ஷய் குமார்.. வருமான வரித்துறை சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

ஜே.பி. நகர் மற்றும் பி.டி.எம். லேஅவுட், புத்தேனஹள்ளி, பிலேகஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பெங்களூரின் பல பகுதிகளில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘தூய பிராமண’ உணவை டெலிவரி செய்வதாக வெளிப்படையாக அந்த விளம்பரம் கூறியது. இப்படி விளம்பரப்படுத்துவது புதிதில்லை என்றாலும் இதை போடும் முன்னர் சிந்திக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

First published:

Tags: Bengaluru, Caste, Restaurant, Twitter