• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அச்ரேகருக்கு இறுதி மரியாதை செய்யாத விவகாரம்! சச்சினுக்கு சிவசேனா கோரிக்கை

அச்ரேகருக்கு இறுதி மரியாதை செய்யாத விவகாரம்! சச்சினுக்கு சிவசேனா கோரிக்கை

அர்ச்ரேகர்-சச்சின் டெண்டுல்கர்

அர்ச்ரேகர்-சச்சின் டெண்டுல்கர்

மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை வாங்கியுள்ள அச்ரேகருக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகருக்கு மாநில அரசு இறுதி மரியாதை வழங்காததால், சச்சின் டெண்டுல்கர் அரசு விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகர், வயது முதிர்ப்பின் காரணமாக கடந்த புதன் கிழமை காலமானார்.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை வாங்கியுள்ள அச்ரேகருக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யவில்லை.

இந்த விவகாரத்துக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த சிவசேனாவின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவட், ‘பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சாரியா விருது வாங்கிய அச்ரேகருக்கு ஏன் மஹாராஷ்டிரா அரசு இறுதி மரியாதை செய்யவில்லை? மஹாராஷ்டிரா அரசு ராமகந்த் அச்ரேகரை அவமானப்படுத்தியுள்ளது. இனிவரும் அரசு விழாக்களில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த மஹாராஷ்டிரா மூத்த அமைச்சர், ‘அரசு தரப்பு தொடர்பில் (communication gap) ஏற்பட்ட பிரச்னை காரணமாக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யமுடியாமல் போய்விட்டது’ என்று தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, அச்ரேகரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

இதுகுறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், ‘சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பல்விந்தர் சிங், ரமேஷ் பவார் உள்ளிட்டோரின் வாழ்வில் பங்களிப்பு செய்ததற்கு அச்ரேகருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது. மேலும், அச்ரேகருக்கு இறுதி மரியாதை செய்யாததற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: