Home /News /national /

சிறைக்கு சென்றால் படிக்க வேண்டாம் என்பதால் நண்பனை கொன்ற சிறுவன்.. திரைப்படத்தை பார்த்து 5 மாதம் திட்டமிட்டது அம்பலம்

சிறைக்கு சென்றால் படிக்க வேண்டாம் என்பதால் நண்பனை கொன்ற சிறுவன்.. திரைப்படத்தை பார்த்து 5 மாதம் திட்டமிட்டது அம்பலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தன்னை படிக்க சொல்லி வீட்டில் இருப்பவர்கள் வற்புறுத்தியதாகவும், சிறைக்கு சென்றால் படிக்க தேவையில்லை என்பதால் இவ்வாறு செய்ததாக சிறுவன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ghaziabad, India
    உத்தரபிரதேஷ் மாநிலம் மசூரியில் உள்ள டெல்லி - மீரட் விரைவு சாலையில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது 13 வயது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விரைவு சாலையில் செல்லும் கார்களை வேடிக்கை பார்க்கலாம் என அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்துள்ளார். பின்னர் பீர் பாட்டில் மூலம் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இதனையடுத்து அந்த சிறுவனின் உடலை, அருகில் இருந்த புதரில் வீசிவிட்டு தப்பிச்சென்றார். உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு பயிலும் மாணவர் என தெரியவந்தது. இது குறித்து கொலை செய்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போது, தன்னை படிக்க சொல்லி வீட்டில் இருப்பவர்கள் வற்புறுத்தியதாகவும், சிறைக்கு சென்றால் படிக்க தேவையில்லை என்பதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

    விசாரணையில், அந்த சிறுவன் பல திரைப்படங்கள் பார்த்து, 5 மாதம் இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக தெரிய வந்துள்ளது. மேலும் அச்சிறுவன் பள்ளி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் 3 முறை பள்ளி மாற வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி