ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹரியானா மாநிலத்தில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்

ஹரியானா மாநிலத்தில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்

மாதிரி படம்

மாதிரி படம்

boy arrested for raping 4 year old girl | சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருக்கும் 15 வயது சிறுவன், அந்த குழந்தையை அவன் அறைக்கு கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Haryana, India

  ஹரியானா மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் வாயில் சிறுநீர் கழித்த சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான்.

  கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் தனியாக அந்த சிறுமியை விட்டு, தாய் வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் இருக்கும் 15 வயது சிறுவன், அந்த குழந்தையை அவன் அறைக்கு கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

  இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வந்த அந்த தாய், குழந்தை மோசமான நிலையில் இருப்பதை பார்த்திருக்கிறார். மேலும் குழந்தை தனக்கு அடிவயிற்று பகுதியில் வலிப்பதாக கூறியது. சிறுமியிடம் தாய் வற்புறுத்தி கேட்டபோது தான், பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததை சொன்னது. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்துறையில் புகாரளித்தார்.

  இதையும் படிக்க : பள்ளி கழிவறையில் வைத்து 11 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சீனியர்கள்.. 

  மேலும் அந்த புகாரில் “சிறுவன் என் குழந்தையின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறான். அதனால் அவளுக்கு வயிற்றில் தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. இப்போது என் குழந்தை மிகவும் அதிர்சியடைந்த மனநிலையில் உள்ளது. அந்த சிறுவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் தேவேந்திரகுமார் கூறுகையில், “குற்றத்தில் ஈடுபட்டவன் 15 வயது சிறுவன் என்பதால், அவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அந்த சிறுவன் தற்போது பரிதாபாத்திலுள்ள சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான். இந்த வழக்கு குறித்து மேலும் விசாரிக்கப்படும்” என தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Child Abuse, Child harassment, Crime News, Rape case