விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய இங்கிலாந்து எம்.பி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து பதில் கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய இங்கிலாந்து எம்.பி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து பதில் கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

இந்திய விவசாயிகளின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பந்தமே இல்லாத பதிலை அளித்துள்ளார்.

 • Share this:
  வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்த விவசாயிகள், வரும் 14ம் தேதி நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 15வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி வரும் 14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

  வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் - டெல்லி, ஆக்ரா - டெல்லி விரைவுச்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், டெல்லிக்கு வரவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

  இதனிடையே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சீக்கிய எம்.பி தன்மன்ஜித் சிங் தேசி, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பேசினார். அதில், இந்திய பிரதமரிடம் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் போரிஸ் ஜான்சன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த போரிஸ் ஜான்சன், எல்லைப் பிரச்னையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுக்குள் சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

  கேள்வி: நமது கவலைகளை(விவசாயிகள் போராட்டம்) இந்திய பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும். தற்போது நீடிக்கும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நம்புகிறோம். அனைவரும் அமைதி வழியில் போராட உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.

   

      

   

  போரிஸ் ஜான்சன் பதில்: இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து தீவிர கவலைகள் உள்ளன. ஆனால், இந்த பிரச்னைகளுக்கு இரு அரசுகளும்தான் தீர்வுகாண வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பந்தமே இல்லாத பதிலை அளித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: