Home /News /national /

வெள்ளை நிற வேட்டி சட்டையில் அம்பேத்கர் - சர்ச்சையை கிளப்பிய அட்டைப்படம்!

வெள்ளை நிற வேட்டி சட்டையில் அம்பேத்கர் - சர்ச்சையை கிளப்பிய அட்டைப்படம்!

மலையாளி மெமோரியல் அட்டை படம்

மலையாளி மெமோரியல் அட்டை படம்

வெள்ளை வேட்டியில், தங்க நிற கரையுடன் அம்பேத்கருக்கு உருவகம் கொடுத்திருப்பது, அம்பேத்கரை உயர்சாதி ஹிந்து பற்றாளர் போல் காட்சிப்படுத்தும் முயற்சி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    உன்னி எனும் மலையாள சிறுகதை எழுத்தாளர் எழுதிய 'மலையாளி மெமோரியல்' எனும் சிறுகதை புத்தகத்தின் அட்டைப் படம், அம்பேத்கர் வேட்டி சட்டை அணிந்திருப்பது போலவும் அவருக்கு பின் காந்தியின் புகைப்படம் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    வழக்கமாக கருப்பு அல்லது நீல நிற கோட் அணிந்து, பாலிஷ் செய்த காலணிகளுடன் தான் அம்பேத்கரின் புகைப்படத்தை பாத்திருப்போம். ஆனால் இவ்வாறு வெள்ளை வேட்டியில், தங்க நிற கரையுடன் அம்பேத்கருக்கு உருவகம் கொடுத்திருப்பது, அம்பேத்கரை உயர்சாதி ஹிந்து பற்றாளர் போல் காட்சிப்படுத்தும் முயற்சி என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

    அம்பேத்கரும் காந்தியும் கொள்கை ரீதியில் முரண்படும் போது காந்தியின் புகைப்படத்தை அதில் காட்சிப்படுத்தியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Also Read : தொண்டர்கள் காலில் விழ அனுமதிக்கக் கூடாது.. அமைச்சர்களுக்கு காறர் உத்தரவுகளை பிறப்பித்த தேஜஸ்வி!

    இந்நிலையில், இந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் உன்னி பேசுகையில், இந்த அட்டைப்படத்தை விமர்சிப்பவர்கள் கதையை படிக்காதவர்கள் தான் எனவும் கதைக்கு தேவைப்பட்டதால் தான் இவ்வாறு வடிவமைத்ததாகவும் கூறினார். மேலும் இந்த புத்தகத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துவது ‘தாலிபானிசம்’ போன்றது எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புத்தக்கத்தை போலவே அதன் அட்டைப்படமும் மிகவும் முக்கியமான ஒன்று தான், கதை படிக்காமலும் அட்டைப் படத்தை விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்கின்றனர். மேலும் அம்பேத்கருக்கு சற்றும் தொடர்பில்லாத மலையாள உயர்சாதியினர் அணியும் உடையில் அவரை காட்சிப்படுத்தி இருப்பது அவரை உயர்சாதி பற்றாளராக அடையாளப்படுத்தும் முயற்சி எனவும் இது போன்ற நடவடிக்கையை ஊக்கப்படுத்த முடியாது எனவும் விமர்சித்து வருகின்றனர்.
    Published by:Siddharthan A
    First published:

    அடுத்த செய்தி