கொரோனா தொற்றுநோய் பாதிப்பு தீவிரமாக இருந்த சமயத்தில் நாடு முழுவதும் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருந்த பெண்களைக் கொண்டாடும் வகையிலான புதிய புத்தகம் ஒன்று டெல்லியில் நடைபெற்ற ரைசினா டையலாக் (Raisina Dialogue) 2022 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனால் வெளியிடப்பட்ட The First Responders: Women Who Led India through The Pandemic என்ற புத்தகம், அடிமட்டத்தில் உள்ளவர்கள் தொற்றுநோய்களின் சவால்களை எதிர்த்துப் போராடுவதில் இந்தப் பெண்களின் முக்கியப் பங்கு மற்றும் பெண்களுக்கான தலைமைத்துவத் திறனை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிக்கும் விதமாக உள்ளது.
இந்தக் கதைகள் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புத்தகம் வெளியிட்டப்பட்டது. புத்தக வெளியீட்டை தொடர்ந்து, பெண்கள் தலைமை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது.
இதில்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஆளுமை, கல்வி மற்றும் திறன், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, தொழில்முனைவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 25 இந்தியப் பெண்களின் பணி மற்றும் பல ஆண்டுகளாக தலைமைத்துவத்திற்கான அவர்களின் தனிப்பட்ட பயணங்களை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.
உத்தரகாண்டை சேர்ந்த நீர் பாதுகாப்பு வழக்கறிஞர் முதல் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர், மணிப்பூரை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர், தெலுங்கானாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி வரை பல பெண் ஆளுமைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Reliance Foundation