ஹோம் /நியூஸ் /இந்தியா /

6 மாதங்களுக்கு மேலாக நதியால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் : மகாராஷ்டிரா மாநிலத்தை கண்டித்த உயர்நீதிமன்றம்!

6 மாதங்களுக்கு மேலாக நதியால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் : மகாராஷ்டிரா மாநிலத்தை கண்டித்த உயர்நீதிமன்றம்!

நதியால் துண்டிக்கப்பட்ட ஊர்களை உடனடியாக இணைக்க வேண்டும்

நதியால் துண்டிக்கப்பட்ட ஊர்களை உடனடியாக இணைக்க வேண்டும்

இணைப்புக்காக கிராமங்களைச் சுற்றி 8 பாலங்கள் அமைக்க அரசு திட்டமிட்டிருந்தும் இதுவரை கட்டப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா அரசைக் கடுமையாகக் கண்டித்து, உத்தரவிட்டது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை காலத்தில் தினா நதியால் வருடத்தில் 6 மாதங்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படும் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களை இணைக்க தற்காலிக பாலம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டது.

  தினா நதி அருகே உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வெங்கனூர், பட்கோடோலா, அடங்கேபள்ளி மற்றும் சுர்கான் போன்ற கிராமங்களின் பழங்குடியின மக்களின் அவலநிலை தொடர்பான மனுவை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.

  இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள பெரிய பகுதிகள் நீரில் மூழ்கியதால், தற்காலிக பாலம் கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை கூறியுள்ளனர். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கும் மாவட்டத்தின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் பயணிப்பதற்கு ஏழு விசைப்படகுகளை வழங்கியுள்ளனர்.

  மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பான வழக்கு: பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை!

  விரைவு படகு வசதியை வழங்கினால் போதாது என்று நீதிபதிகள் எஸ்.பி.சுக்ரே, ஜி.ஏ.சனாப் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. இணைப்புக்காக கிராமங்களைச் சுற்றி 8 பாலங்கள் அமைக்க அரசு திட்டமிட்டிருந்தும் இதுவரை கட்டப்படவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தவிர, அரசு அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 24x7 மின்சாரம், மருத்துவம் மற்றும் கல்வி வசதிகள் வழங்குவது குறித்து மௌனம் காத்தது பற்றியும் கேள்வி எழுப்பினர்.

  ஆகஸ்ட் 27, 2022 அன்று வெங்கனூர் கிராமத்திற்கு ஒரு துணை சுகாதார மையம் அனுமதிக்கப்பட்டதாகவும், தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்தியாவின் பிம்பத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க நோக்கம்.. உலக பசி குறியீடு பட்டியலை நிராகரித்த மத்திய அரசு!

  இருப்பினும், இந்த வசதிகள் தற்போதைக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் ஒரு முழுமையான வாழ்க்கையை நடத்துவதற்கு, நீண்ட காலத்திற்கு இந்த கிராமங்கள் போதுமானதாக இருக்காது.

  ஏனெனில் இந்த கிராமங்கள் பிரதான நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநில அரசும், கீழ்மட்டத்தில் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளும் இதில் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  8 பாலங்கள் கட்டுவது நீண்டகாலத் திட்டமாகும். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க, உடனடியாக ஒரு தற்காலிக பாலம் கட்டுவது முக்கியம். இது குறித்து விரைவில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: High court warning, Maharashtra, Mumbai