• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தால், அந்த உத்தரவு பொதுமக்கள் முன்னிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பதினான்கு வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையைச் சேர்ந்த 52 வயது நிறைந்த வழக்கறிஞர், 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியைத் திருமணம் செய்தார். ’என்னுடைய தாத்தா எனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டார் என்று சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு அந்த வழக்கறிஞர், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுமியைத் திருமணம் செய்து அவருடன் உறவு வைத்ததற்காக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ(POCSO) சட்டத்தின் கீழ் வழக்கறிஞரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அந்த வழக்கில், சுமார் 10 மாதங்கள் சிறையிலிருந்த அவர், பிணையில் வெளியில் வந்துள்ளார். வழக்கறிஞர் திருமணம் செய்த சிறுமி, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி 18 வயதைக் கடந்தார். அதனையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில், ‘2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதற்காக என் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்தமனு, மே 2-ம் தேதி நீதிபதிகள் ரஞ்சித் மோர், பாரதி தங்கிரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தால், அந்த உத்தரவு பொதுமக்கள் முன்னிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார்.

    முன்னதாக, அந்த வழக்கில் புகார் அளித்த பெண் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வழக்கறிஞருடனான பிரச்னை முடிந்துவிட்டது. நான், தற்போது அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், ‘துரதிருஷ்டவசமாக, குற்றம்சாட்டப்பட்டவருடன் திருமணமாகும்போது, பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்துள்ளார். ஆனால், தற்போது 18 வயதைக் கடந்துவிட்டார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவருடன் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார். அந்த வழக்கறிஞருடன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்தவராக வாழ விரும்புகிறார்.

    சட்டப்படி அவர்களது திருமணம் செல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது, அது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. நாங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறோம். சமூகத்தில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

    எனவே, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை முக்கியமாக கருதுகிறோம். வழக்கறிஞர், அந்தப் பெண்ணின் பெயரில் 10 ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க வேண்டும். மேலும், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் 7 லட்ச ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக(fixed deposit) செலுத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    பெண்ணின் திருமண வயது 18 என்று சட்டம் உள்ளநிலையில், 14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி, 16 வயதைக் கடந்த ஆணும் பெண்ணும் விரும்பி உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: