அஸ்ஸாம் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு: 11 பேர் காயம்

இந்த ரயில் இன்று இரவு 7 மணியளவில் உதால்கிரி என்னும் பகுதியை கடந்து சென்றபோது, ரயிலின் ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர்.

அஸ்ஸாம் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு: 11 பேர் காயம்
சேதமடைந்த ரயிலின் உள்பகுதி
  • News18
  • Last Updated: December 1, 2018, 9:27 PM IST
  • Share this:
அஸ்ஸாமில் காமாக்யா – டெகர்கான் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் இன்று மாலை குண்டுவெடிப்பு நடந்தது. இதில், 11 பேர் காயமடைந்தனர்.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது காமாக்யா. இங்கிருந்து சோனித்பூர் மாவட்டத்திலுள்ள டெகர்கான் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் இன்று இரவு 7 மணியளவில் உதால்கிரி என்னும் பகுதியை கடந்து சென்றபோது, ரயிலின் ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர். உயிர்சேதம் குறித்து தகவல் ஏதுமில்லை.


காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Also watch

First published: December 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading