மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்ற விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
Also Read:
உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன்
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read:
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை – சிக்கிம் அரசின் முன்மாதிரி நடவடிக்கை!
இதனிடையே போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 8 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் உட்கொண்டார்களா என கண்டறிய சோதனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர், சுமார் 7 மணி நேரமாக சோதனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கப்பல் மீண்டும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.