Prashant Kishor | West Bengal Election result | மோடியின் புகழினால் மட்டுமே பாஜக தேர்தலில் வெல்ல முடியுமா? - ‘மேன் ஆஃப் த மேட்ச்’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Prashant Kishor | West Bengal Election result | மோடியின் புகழினால் மட்டுமே பாஜக தேர்தலில் வெல்ல முடியுமா? - ‘மேன் ஆஃப் த மேட்ச்’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

நரேந்திர மோடி - மம்தா பானர்ஜி

பெங்காலில் வெல்கிறோம் என்று மிகப்பெரிய பிரச்சார பீரங்கியை கட்டவிழ்த்து விட்டது, மோடியின் புகழ் ஒன்று போதுமா? அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று விட முடியுமா? என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

  • Share this:
    மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போர் என்று வர்ணிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் 205 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜகவுக்கு ஒரு அடி கொடுத்தது பற்றி பிரசாந்த் கிஷோரை மேன் ஆஃப் த மேட்ச் என்று திரிணாமூல் புகழ்ந்து வருகிறது.

    தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “முடிவுகள் ஒரு சார்பாக இருந்தாலும் இது உண்மையில் கடும் போராட்டமே. தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது. எங்கள் பிரச்சாரத்தை கடினமாக்கியது. மக்கள் கொடுக்க ஆசைப்பட்டதற்கு மேல் திரிணாமுல் அதிகம் பெற்றுள்ளது என்றே கூறுவேன்.

    பெங்காலில் வெல்கிறோம் என்று மிகப்பெரிய பிரச்சார பீரங்கியை கட்டவிழ்த்து விட்டது, மோடியின் புகழ் ஒன்று போதுமா? அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று விட முடியுமா?

    அன்று பாஜக இரட்டை இலக்கத்தைக் கடந்து 100 சீட்கள் வென்றால் தொழிலை விட்டு விடுகிறேன் என்று கூறினேன், இப்போது பாஜக 100 சீட்கள் எடுக்கவில்லை, இப்போது கூட இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன். அது ஒரு பிரச்னையல்ல.

    அன்று பாஜக 100 சீட்கள் வந்தால் தொழிலை விட்டு விடுவேன் என்ற போது பாஜக தலைவர் கைலாஷ் விஜய் வார்க்யா, “பெங்காலில் இப்போது இருந்து வரும் பாஜக சுனாமியில், ஆட்சி அமைத்த பிறகு நாடு ஒரு நல்ல தேர்தல் உத்தி வகுப்பாளரை இழக்கப் போகிறது” என்று கிண்டல் செய்தார்.

    ஆனால் பிரசாந்த் கிஷோரின் அரசியல் வாழ்க்கைத் தொடரவே போகிறது என்று ட்விட்டர்வாசிகள் விஜய் வார்க்யாவுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இதைவிடவும் அன்று பிரசாந்த் கிஷோருக்கு சில இணையவாசிகள் வேறு வேலைகளையும் பரிந்துரை செய்து கிண்டல் செய்தனர்.

    இன்று அவர் கூறும்போது வகுப்புவாத அரசியல் எதுவரை போக முடியும் என்பதற்கு மேற்கு வங்க மக்கள் கொடுத்த தீர்ப்பே பதில் என்று தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: