உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகளை சந்தித்த போயிங் 737-800 ரக விமானம்.. விபத்துகளும், பின்னணியும்..

கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானம், 2010-ம் ஆண்டு மங்களூரு விபத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகளை சந்தித்த போயிங் 737-800 ரக விமானம்.. விபத்துகளும், பின்னணியும்..
kerala kozhikode crash
  • Share this:
கோழிக்கோடு விமான விபத்து நாட்டையே உலுக்கி இருக்கும் சூழலில், விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737-800 ரகம் என தெரியவந்துள்ளது. இந்த ரக விமானமானது இதற்கு முன்னரும் பல்வேறு விபத்துகளை உலகளவில் சந்தித்திருக்கிறது.

குறிப்பாக, 2006 செப்டம்பரில், 154 பயணிகளுடன் பிரேசிலில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர்.

2009-ல் துருக்கியில் இருந்து கிளம்பிய விமானம், நெதர்லாந்தில் மூன்று துண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். 84 பேர் காயமடைந்தனர்.


2010ல் லெபனானில் இருந்து புறப்பட்ட விமானம், கடலில் விழுந்ததிலும் 90 பேர் மரணமடைந்தனர். இதேபோல, 2010-ம் ஆண்டில் மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த மாபெரும் விபத்திலும், போயிங் 737-800 ரக விமானத்தில் பயணித்த 158 பேர் உயிரிழந்தனர்.

இந்தாண்டு ஜனவரியில், ஈரானில் தவறுதலாக, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், துருக்கியில் விமானம் பிளந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 179 பேர் காயமடைந்தனர்.
மேலும் படிக்க...கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளில் நடந்த விபத்துகளும், அதன் பின்னணியும்..

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம், கோழிக்கோட்டில், விமானத்தின் பாகங்கள் இரண்டு துண்டாக உடைந்த நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading