சொத்துக்காக 45 வயது பெண்ணை திருமணம் என்று வாட்ஸ்அப் வதந்தி..! போலீசை அணுகிய தம்பதி

அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தும் கடந்த சில நாட்களாக வதந்திகள் தீயாய் பரவின.

news18
Updated: February 9, 2019, 2:06 PM IST
சொத்துக்காக 45 வயது பெண்ணை திருமணம் என்று வாட்ஸ்அப் வதந்தி..! போலீசை அணுகிய தம்பதி
அனூப் தம்பதி
news18
Updated: February 9, 2019, 2:06 PM IST
கேரளாவைச் சேர்ந்த இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதி போலீசில் புகாரளித்துள்ளனர்.

கேரள மாநிலம் செருப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனூப் செபாஸ்டியன் (29) தனது கல்லூரித் தோழியான ஜுபி ஜோசப் (27) என்ற பெண்ணை அவர் கடந்த 9-ம் தேதி திருமணம் செய்தார். இதை ஒட்டி, தினசரி நாளிதழ்களில் இருவரின் புகைப்படத்தை போட்டு குடும்பத்தினர் விளம்பரம் செய்திருந்தனர்.

இந்நிலையில், 47 வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்த 29 வயது இளைஞர் என்று நாளிதழில் வெளியான புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஷம செய்தி பரப்பப்பட்டது.

மேலும், அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தும் கடந்த சில நாட்களாக வதந்திகள் தீயாய் பரவின.

இந்த வதந்தியால் வேதனை அடைந்த புதுமண தம்பதியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வதந்தியை பரப்பியவர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Also See...

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...