• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுவை: அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்து காணாமல் போன பெண்ணின் உடல்

புதுவை: அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்து காணாமல் போன பெண்ணின் உடல்

அரசு மருத்துவமனையில் பிணவறையிலிருந்து காணாமல் போயுள்ளது ஒரு பெண்ணின் உடல்.

அரசு மருத்துவமனையில் பிணவறையிலிருந்து காணாமல் போயுள்ளது ஒரு பெண்ணின் உடல்.

புதுச்சேரி அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்து காணாமல் போன பெண்ணின் உடலை மருத்துவ நிர்வாகம் தேடி வருகிறது.

  • Share this:
புதுச்சேரி வில்லியனூர் வி.மணவெலி திரிவேணி நகரில் வசிப்பவர் யோகானந்த். சுய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி குணவேலி (43) மூச்சு இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கு மூச்சு இரைப்பு அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்பொழுது அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனடிப்படையில் யோகனந்த் தனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியதுடன், கொரனோ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டு உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு: 121 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில் இறந்த குணவேலிக்கு கொரோனா தொற்று  இல்லை என முடிவு வெளியான தகவல் வந்ததையடுத்து உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு யோகானந்த் மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் பிணவறைக்குச் சென்று பார்த்தபோது குணவேலியின் உடலைக் காணவில்லை.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்குப் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல மணி நேரமாக அவர்கள் பிணத்தைத் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமிக்குப் புகார் தெரிவித்திருப்பதாகவும், மருத்துவமனை விரைந்து நடவடிக்கை எடுக்க  உறுதியளித்திருப்பதாகவும் அவரது கணவர் யோகானந்த் தெரிவிக்கின்றார்.

புதுச்சேரி அரசின் கதிர்காமம் மருத்துவமனையில் சவக்கிடங்கில் கொரோனா நோயால் இறந்தவர்கள் உடலை வைப்பதற்கும் மற்றபடி இறந்தவரின் உடலை வைப்பதற்கும் தனியாகவும் இடம் உள்ளது. இருப்பினும் கொரோனா நோயாளியின் உடலுக்கு பதிலாக இவரது உடலை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: