ஹோம் /நியூஸ் /இந்தியா /

தந்தையின் தலையை தனியாக எடுத்து தூர வீசிய மகன்.. டெல்லி க்ரைமில் அதிர்ச்சி வீடியோ!

தந்தையின் தலையை தனியாக எடுத்து தூர வீசிய மகன்.. டெல்லி க்ரைமில் அதிர்ச்சி வீடியோ!

அஞ்சன் தாஸ் கொலை வழக்கு

அஞ்சன் தாஸ் கொலை வழக்கு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

சமீபத்தில் ஷ்ரத்தா வாக்கர் கொலை மர்மம் வெளியாகி வரும் சூழலில் மற்றொரு  ஒரு கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக நடத்தப்பட்ட கொலைகள் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு டெல்லியில் தாயும் மகனும் சேர்ந்து தந்தையை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை தூக்கி எறியும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தன்னுடைய தந்தையின் தலையை கருப்பு பிளாஸ்டிக் பையில் எடுத்துச்சென்று மகன் வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அஞ்சன் தாஸ் கொலை வழக்கு :

தீபக் எனும் இளைஞன் தனது  தாயின் 2-வது கணவரான அஞ்சன் தாஸை கொன்றுவிட்டு, தாயின் உதவியுடன் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு வயல்வெளிக்கு அருகில் சுற்றி அப்புறப்படுத்த சென்றதை காணொளியில் காணலாம்.

இதையும் படிங்க: மொத்தமாக 8 ரூபாய்.. 415 கிமீ பயணித்து 205 கிலோ வெங்காயம் விற்ற விவசாயிக்கு ஷாக் மேல் ஷாக்!

முன்னதாக, தீபக் தாயார் பூனம் தனது இரண்டாவது கணவர் தனது நகைகளை விற்று பணத்தை பீகாரில் எட்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது முன்னாள் மனைவிக்கு அனுப்பியதை பூனம் உணர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் தனது மகன் தீபக்குடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு போலவே, அஞ்சன் தாஸின் உடல் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தீபக் சடலத்தின் துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

ஷ்ரத்தா வாக்கர் வழக்கின் விசாரணையில் தான் இந்த வழக்கு குறித்த விஷயம் தெரிய வந்தது. டெல்லியின் சில பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட உடல் உறுப்புகள் ஆண் என கண்டறியப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு ஆணும் பெண்ணும் சில உடல் உறுப்புகளை வீசியதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்ததில், பாண்டவநகரைச் சேர்ந்த அஞ்சன்தாஸ் என்பவர் சில மாதங்களாக காணாமல் போனது தெரிந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இதையடுத்து பூனம், தீபக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பூனம் மற்றும் தீபக் ஜூன் மாதம் தாஸை கொன்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அஞ்சன் தாஸின் 6 உடல் பாகங்களை போலீசார் இதுவரை மீட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Delhi, Murder case, Tamil News