மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து 45 கிமீ தூரத்தில் பீமா என்ற நதி உள்ளது. இந்த நதிக்கரை ஓரமாக கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நான்கு சடலங்கள் காணப்பட்டன. பின்னர் அருகே உள்ள பர்கோன் என்ற பகுதியில் 24ஆம் தேதி அன்று 3 சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. ஒரு இடத்தில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டது காவல்துறையினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இறந்தவர்கள் ஒருவரிடம் செல்போன் இருந்த நிலையில் அதைக் கொண்டு காவல்துறையினர் தகவல் திரட்டினர். அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஏழு பேரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அகமதுநகர் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத் தலைவர் மோகன் பவார் (வயது 50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) ஆகிய ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். மோகன் பவார் மற்றும் குடும்பத்தினர் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இவரது மகள் சமீபத்தில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஓடியவிட்டதாகவும் அதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கருதப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலை என்ற விஷயம் அம்பலமானது. உயிரிழந்த மோகனின் உறவினர் ஒருவரின் மகன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அந்த மரணத்திற்கு மோகன் தான் காரணம் எனக் கருதிய அவரது உறவினர் ஒட்டுமொத்த குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிட வேண்டும் எனக் இந்த கொடூர கொலைகளை செய்ததாக காவல்துறை கூடுதல் எஸ்பி ஆனந்த் தெரிவித்துள்ளார். பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினர் 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News