முகப்பு /செய்தி /இந்தியா / சத்தீஸ்கரில் நக்சல்கள் உடன் சண்டை... 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு...!

சத்தீஸ்கரில் நக்சல்கள் உடன் சண்டை... 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு...!

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில் நேற்று கடும் துப்பாக்கிச்சண்டை நடந்த நிலையில், இன்று 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பாஸ்டார் என்ற பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்ட ரிசர்வ் போலீஸ், சிறப்பு அதிரடிப்படை, நக்சல் தடுப்புப் படை என்று பல்வேறு பிரிவினர் இதில் ஈடுபட்டனர். பிற்பகலில், இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

நீண்ட நேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்த நிலையில் பல வீரர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. 14 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று மாயமான 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நக்சலைட்கள் உடனான சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.

First published:

Tags: Naxal