Home /News /national /

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்.. கொதிக்கும் மீனவர்கள்!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்.. கொதிக்கும் மீனவர்கள்!

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர், யார் படகுகளை யார் ஏலம் விடுவது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்வதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை அடிக்கடி பறிமுதல் செய்து வருகிறது.

    கடந்த 2014 முதல் 2018 வரை இலங்கை கடற்படையால் 125 மீன் பிடி படகுகளும், 17 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, காரைநகர், காங்கேசன் துரை, மயிலட்டி மற்றும் தலைமன்னார் கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் உள்ள இந்த படகுகளை ஏலம் விட கடந்த 2020ல் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் படிக்க: கொரோனா பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? மத்திய அரசு அறிவுரை!

    ஆனால், கொரோனா காரணமாக ஏல நடவடிக்கை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இலங்கை வசம் உள்ள படகுகள் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் ஏலம் விடப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இலங்கை மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இரண்டு நாட்களுக்கு முன்பாக இலங்கை வசம் உள்ள 105 விசைப்படகுகளுக்கு இழப்பீடாக தலா 5 லட்ச ரூபாய், 17 நாட்டுப் படகுகளுக்கு தலா ஒன்றரை லட்ச ரூபாய் என மொத்தமாக 5.6 கோடி இழப்பீடு வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அரசு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

    இலங்கை கடற்படை வசமிருந்த பல கோடி மதிப்பிலான மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்டு உரிய படகின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்மாறு தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த மீனவர்களின் படகை ஏலம் விட இருக்கும் செய்தி மீனவர்கள் இடையே ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேறொரு நாட்டுக்குச் சொந்தமான படகுகளை ஏலம் விடுவது கேலிக்கூத்தானது என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக எதிர்வினை ஆற்றவேண்டும் எனவும் மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Also read: அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்... சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா!!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Fisherman, Srilanka

    அடுத்த செய்தி