ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச்சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து..

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச்சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து..
விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
  • News18
  • Last Updated: September 16, 2020, 5:06 PM IST
  • Share this:
ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றின் வழியாக, கோவில் ஒன்றுக்கு 46 பக்தர்கள் படகில் சென்றனர். அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஆற்றில் விழுந்தோரை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

மீட்பு நடவடிக்கையின் போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Also read... உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு - சட்ட மசோதா நிறைவேற்றம்..

இதனிடையே படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading