ஹோம் /நியூஸ் /இந்தியா /

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

மற்ற வாகனங்கள் அந்த பக்கம் வராதவாறு, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபக்கமும் தடுப்புகளை வைத்து, தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  லக்னோவில் இருந்து வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, நேற்றிரவு 11.30 மணி அளவில் லக்னோ - வாரணாசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, உள்ளே இருந்த நபர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள, காரில் இருந்து வெளியே குதித்தார் என்கின்றனர்.

  தொடர்ந்து, மற்ற வாகனங்கள் அந்த பக்கம் வராதவாறு, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபக்கமும் தடுப்புகளை வைத்து, தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து, போலீசார் விசாரணையில், முகமது இர்பான் என்பவருக்கு சொந்தமானது அந்த பிஎன்டபிள்யூ கார் என்பது தெரியவந்தது. இவர் வாரணாசியில் இருந்து நேற்று காலை தனது காரை சர்வீஸ் செய்வதற்காக லக்னோ எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து, சர்வீஸ் முடிந்து மீண்டும் இரவில் வாரணாசி எடுத்து சென்றுள்ளார்.

  அப்போது, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென காரின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் எதனால், வண்டி நின்றுவிட்டது என்பதை அறிவதற்கு முன்பே, காரில் இருந்து புகையாக வரத்தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த சில விநாடிகளில் கார் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.

  இதையடுத்து, காரிலிருந்த முகமது இர்பான் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள காரில் இருந்து குதித்துள்ளார். உடனடியாக அவர் சுதாரித்து செயல்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Car, Car accident