புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலி.. மருத்துவர் சொன்ன காரணம்!

மாதிரி படம்

சிறுவன் காதில் புளூடூத் மாட்டியிருந்ததால் அவரின் இரு காதுகளிளும் இந்த வெடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

  • Share this:
புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியதில் 15 வயது சிறுவன் பலியாகி இருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாவுக்கான காரணம் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளது நம்மை முன்னெச்சரிக்கையாக செயல்பட வழிவகுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தின் உதய்புரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ் நகர். சம்பவத்தன்று ராகேஷ் தனது நண்பர் ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலின் போது அவர் புளூடூத் இயர் போனை பயன்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் திடீரென அந்த புளூடூத் இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியிருக்கிறது.

இதன் காரணமாக சிறுவன் ராகேஷ் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். சிறுவன் காதில் புளூடூத் மாட்டியிருந்ததால் அவரின் இரு காதுகளிளும் இந்த வெடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


மாதிரி படம்


இச்சம்பவம் குறித்து பேசிய மருத்துவர் எல்.எம்.சுந்த்லா, “புளூடூத் சாதனம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் சிறுவன் ராகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறான், சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருக்கிறார். எனக்கு தெரிந்தவகையில் நாட்டிலேயே இது போன்ற சம்பவத்தில் முதல் முறையாக இப்போது தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Also Read: திருமணத்தை நிறுத்தி மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்

பொதுவாக நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துபவர்களும், வாகனங்களில் செல்வோரும் தற்போது புளூடூத் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் மாணவர்கள் புளூடூத் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சூழலில் 15 வயது சிறுவன் புளூடூத் சாதனம் வெடித்துச் சிதறி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான காரணம் முழுமையாக தெரியாத நிலையில், புளூடூத் சாதனங்களை பயன்படுத்தும் போது சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக நேரம் சார்ஜில் வைத்திருப்பதும், புளூடூத் சாதனம் சூடாக இருந்தாலும் அதீத எச்சரிக்கையை கடைப்பிடிப்பது நல்லது.
Published by:Arun
First published: