Home /News /national /

எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம்? ஆய்வில் தகவல்

எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம்? ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

B இரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் அதே இரத்தக் குழுவைக் கொண்ட பெண் நோயாளிகளைக் காட்டிலும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை ரத்த வகைகளை  அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், A, B மற்றும் Rh+ ரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.

    கொரோனா 2வது அலையின் பாதிப்பு இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பும் 10 ஆயிரத்துக்கு குறைவாகவே பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தொற்று குறித்த அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் இயங்கிவரும் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை கொரோனா பரவல் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதிவரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது.

    இதில்,  A, B ம்ற்றும் Rh+ ரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. O, AB மற்றும் Rh- ஆகிய ரத்த பிரிவுகளை கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவு என்றும் தெரியவந்தது.ன  ‘கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் 2 ஒரு புதிய வைரஸ்,. மேலும் கோவிட்-19 ஆபத்து அல்லது முன்னேற்றத்தில் இரத்தக் குழுக்கள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே, இந்த ஆய்வில் ABO மற்றும் Rh இரத்தக் குழுவின் தொடர்பு, கோவிட்-19 பாதிப்பு, முன்கணிப்பு, மீட்பு நேரம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நாங்கள் ஆராய்ந்தோம்," என்று ஆராய்ச்சித் துறையின் ஆலோசகர் டாக்டர் ரஷ்மி ராணா தெரிவித்தார்.

    இந்த ஆய்வில்,  B இரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் அதே இரத்தக் குழுவைக் கொண்ட பெண் நோயாளிகளைக் காட்டிலும் கொரோனா தொற்றால்  அதிகம் பாதிக்கப்படுவதாகவும்  AB இரத்த  பிரிவை உடைய 60 வயது மற்றும் அதற்கு குறைந்த  வயதுடைய நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, O Blood Group

    அடுத்த செய்தி