இப்படியும் செய்யலாமே?- மொய்ப்பணத்துக்குப் பதில் ரத்த தானம்: ஆந்திர திருமணத்தில் புதுவித முயற்சி

இப்படியும் செய்யலாமே?- மொய்ப்பணத்துக்குப் பதில் ரத்த தானம்: ஆந்திர திருமணத்தில் புதுவித முயற்சி

ஆந்திர புதுமண ஜோடி.

ஆந்திராவில் திருமணம் ஒன்றில் மொய்ப்பணம், பரிசுப்பொருட்களுக்குப் பதிலாக ரத்த தானம் பெறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது.

 • Last Updated :
 • Share this:
  ஆந்திராவில் திருமணம் ஒன்றில் மொய்ப்பணம், பரிசுப்பொருட்களுக்குப் பதிலாக ரத்த தானம் பெறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது.

  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, பிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீலம் தயா சாகர். இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஸ்வேதா என்ற பெண்ணுடன் நேற்று ஸ்ரீ மாதவ சுவாமி தேவஸ்தானத்தில் திருமணம் நடைபெற்றது.

  இவர் திருமணத்துக்கு அழைக்கும் போதே மொய்ப்பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு வர வேண்டாம் என்று நண்பர்களிடம் உறவினர்களிடம் அறிவித்து விட்டார். பதிலாக முடிந்தவர்கள் ரத்த தானம் செய்யுங்களேன் என்ற புதிய நல்லெண்ணக் கோரிக்கையை முன் வைத்தார்.

  இதற்கு நண்பரக்ள், உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் திருமணத்துக்கு வந்தவர்கள் ரத்த தானம் செய்தனர்.

  திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் விருப்பமுள்ளவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த தானம் வழங்க உதவி புரிந்தனர், அவர்களும் ரத்த தானம் வழங்கி மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

  திருமணத்திற்கு பரிசுப்பொருள் வேண்டாம். பணம் வேண்டாம், ரத்த தானம் வழங்குங்கள் என்ற இந்த தம்பதியினரின் நல்லுணர்வுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
  Published by:Muthukumar
  First published: