கட்டணம் செலுத்தாத பார்வையற்ற சிறுவன்! இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்கவைத்த பள்ளி நிர்வாகம்

வெயில் நிறுத்தப்பட்ட மாணவர்களில் ஒருவர் பார்வைத் திறன் அற்றவர். அப்போது, வெயிலின் தாக்கத்தால் மாணவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கிய மாணவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

news18
Updated: March 31, 2019, 7:02 PM IST
கட்டணம் செலுத்தாத பார்வையற்ற சிறுவன்! இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்கவைத்த பள்ளி நிர்வாகம்
கோப்புப்படம்
news18
Updated: March 31, 2019, 7:02 PM IST
கேரளாவில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவச் சிறுவர்கள் இருவரை சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவைத்து தண்டனை அளித்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை பள்ளி நிர்வாகம் நிற்கவைத்து தண்டனை அளித்துள்ளது.

வெயில் நிறுத்தப்பட்ட மாணவர்களில் ஒருவர் பார்வைத் திறன் அற்றவர். அப்போது, வெயிலின் தாக்கத்தால் மாணவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கிய மாணவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று மாணவர்கள் இருவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மாணவச் சிறுவர்களை வெயிலில் நிற்கவைத்து தண்டனை அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

. அதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் நலஆணையம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையிடம் குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கேரளா மனித உரிமைகள் ஆணையமும் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

Also see:

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...