ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

Baba Vanga

Baba Vanga

வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள் பூமியில் உயிர்களின் வாழ்க்கை குறித்து அறிய ‘Oumuamua’ எனும் செயற்கைகோளை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  2022ம் ஆண்டு எப்படி இருக்கும்? இந்த ஆண்டில் என்னென்ன நிகழ்வுகள் முக்கியமாக நடைபெறும் என்பது குறித்து  பாபா வாங்கா வெளியிட்ட கணிப்புகள் குறித்து தற்போது அறிந்து கொள்ளலாம்.

  பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. 1911ம் ஆண்டு பிறந்த பாபா வாங்கா, தனது 12வது வயதில் இயற்கை பேரிடரில் சிக்கிய போது தனது கண் பார்வையை இழந்தார். இதன் பின்னர் அவருக்கு எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது. உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் அவரிடம் சென்று தங்களின் எதிர்காலம் குறித்த தகவல்களை பெற்றுச் செல்வார்கள். அப்படி ஒரு முறை தன்னை பார்க்க வந்திருந்த பாடகியிடம் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்த பாபா வாங்கா, சிறிது நேரம் கழித்து நீ கிளம்பிச் செல், 3 மாதங்களுக்கு பின் முடிந்தால் நீ இங்கு வா. ஆனால் நீ இங்கு வரமாட்டாய் என அவர் தெரிவித்தார். அந்த பாடகி அடுத்த 2 மாதங்களிலேயே சாலை விபத்தில் தனது சகோதரியுடன் பலியானார்.

  Also read:  120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

  2004 சுனாமி பாதிப்பு, சோவியத் யூனியன் இரண்டாக பிரிந்தது, ரஷ்ய அணு உலை விபத்து, சோவியத் யூனியனின் 2வது தலைவர் ஜோசஃப் ஸ்டாலினின் துல்லியமான மரண தேதி, செப்டம்பர் 11 தாக்குதல், 45வது அமெரிக்க அதிபர், விளையாட்டு தொடர்களின் முடிவுகள் போன்ற பலவற்றை அவர் கணித்திருக்கிறார். இதுவரை அவர் கணித்தவைகள் 85% துல்லியமாக நடந்திருக்கிறது என கூறப்படுகிறது. 5079ம் ஆண்டு இந்த உலகம் அழிந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

  பாபா வாங்கா கடந்த 1996ம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் மறைந்தார். அவரின் இறப்பையும் அவர் கணித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் உலக நாடுகளில் என்னவெல்லாம் நடைபெறும் என்பது குறித்தும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

  Also read:  நடிகை சன்னி லியோனுக்கு ம.பி அமைச்சர் எச்சரிக்கை - 3 நாட்கள் கெடு!

  2021ம் ஆண்டு கொரோனா தாக்கத்தால் பலருக்கு சிக்கலாக நகர்ந்திருக்கும் நிலையில் 2022ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் என்னவெல்லாம் நடக்கும் எனப்து குறித்து பாபா வாங்கா வெளியிட்டுள்ள கணிப்புகளை தற்போது அறிந்து கொள்வோம்.

  1. பூகம்பம் - சுனாமி: பாபா வாங்காவை பொறுத்தவரையில் 2022ம் ஆண்டு அதிகளவில் பூகம்பங்களும், சுனாமிகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகள் பலவும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்திக்கும். இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படவிருக்கும் சுனாமியால் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

  Also read:  டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

  2. சைபீரிய வைரஸ்: மிக மோசமான வைரஸ் ஒன்றை சைபீரியாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள். புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகள் காரணமாக, வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறும்.

  3. இந்தியாவில் வெட்டுக்கிளி தாக்குதல்: இந்த ஆண்டு இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரியை தொடும். மேலும் இந்தியாவில் கடுமையான வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டு அதன் மூலம் உணவு தானிய பேரழிவு ஏற்படும்.

  Also read:  ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குழந்தைகளிடையே பாதிப்பு 4 மடங்காக உயர்வு - அலறும் அமெரிக்கா

  4. ஏலியன் தாக்குதல்: வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள் பூமியில் உயிர்களின் வாழ்க்கை குறித்து அறிய ‘Oumuamua’ எனும் செயற்கைகோளை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த செயற்கைக்கோள் மனிதர்களை சிறைபிடித்து செல்லும். 2130ம் ஆண்டு வாக்கில் ஏலியன்களின் உதவியோடு நீருக்கடியில் எப்படி வாழ்வது என்பதை மனிதர்கள் கற்றறிவார்கள்.

  5. தண்ணீர் பஞ்சம்: உலக நாடுகளின் முக்கிய கடற்கரையை ஒட்டிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கும்.

  6. விர்ச்சுவல் ரியாலிட்டி: மொபைல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்களில் மனிதர்கள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால் உண்மையாக உலகத்திற்கும், உண்மையற்ற உலகிற்கும் வித்தியாசம் இருப்பதை உணராமல் மனிதர்கள் குழம்பித் தவிப்பார்கள்.

  Published by:Arun
  First published:

  Tags: New Year