வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடிப்பு - கேரளாவிலும் எழும் சர்ச்சை

வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடிப்பு - கேரளாவிலும் எழும் சர்ச்சை
  • Share this:
கேரளாவிலும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களை மாநில எல்லையிலேயே நிறுத்தி அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வெளிமாநிலங்களில் சிக்கியிருந்தவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

குறிப்பாக, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலங்களில் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு நடைப் பயணமாக செல்லத் தொடங்கினார்கள். அதனால், ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக திரளும் சூழல் ஏற்பட்டது. அதேபோல, மற்ற மாநிலங்களிலும் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிவருகின்றனர்.


அதேபோல, கேரளா மாநிலத்தின் கர்நாடக எல்லையான வயநாடு பகுதி வழியாக கேரளாவுக்குள் நுழைந்தவர்களை எல்லையிலேயே நிறுத்தி தீயணைப்பு வீரர்கள், சுவரில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு அவர்கள் மீது கிருமி நாசினியைத் தெளித்தனர். இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். உத்தரப் பிரதேச மாவட்ட நிர்வாகமும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை கிருமி நாசினியைத் தெளித்த பிறகே மாநிலத்துக்குள் அனுமதித்தது. அந்தச் செயலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.


Also see:

 
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading