Home /News /national /

பஞ்சாப் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு... 3 பேர் பலி

பஞ்சாப் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு... 3 பேர் பலி

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேச விரோத சக்திகள் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன என்று பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி கூறியுள்ளார்.

    பஞ்சாப்பில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு நிறைந்த இடத்தில், குண்டுவெடிப்பு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று நண்பகல் 12.22 மணியளவில், கழிவறை அருகே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது.

    இதில், கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், ஜன்னலில் இருந்த கண்ணாடிகளும் சிதறிப் பறந்தன. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க : Omicron Cases: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்
     பலத்த பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில், வெடிகுண்டு வெடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க : நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் இன்று மாலை முக்கிய ஆலோசனை
     இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேச விரோத சக்திகள் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21-ஆக குறைப்பு
    Published by:Musthak
    First published:

    Tags: Bomb blast, Punjab

    அடுத்த செய்தி