HOME»NEWS»NATIONAL»blankets to food farmers at tikri border can now avail daily essentials for free at kisan mall vin ghta
விவசாயிகள் போராட்டத்தில் ’கிசான் மால்’ - அனைத்து பொருட்களும் இலவசமாக விநியோகம்!
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கிசான் திட்டத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி விடுத்திருந்த அழைப்பை விவசாயிகள் நிராகரித்தனர். அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் போராட்டதை கலைப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கிசான் திட்டத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி விடுத்திருந்த அழைப்பை விவசாயிகள் நிராகரித்தனர். அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் போராட்டதை கலைப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.
புதிய வேளாண் மசோதாவை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லைப்பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க சீக்கிய அமைப்பான கால்சா கிசான் மால் ஒன்றை புதிதாக அமைத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாகக்கூறி விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் அவர்களின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னின்று செய்து கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சீக்கிய அமைப்பான கால்சா தன்னார்வ தொண்டு நிறுவனம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உணவுகளை கொடுத்து வருகிறது. தற்போது திகிரி எல்லைப்பகுதியில் கிசான் மால் ஒன்றை அந்த அமைப்பு அமைத்துள்ளது.
Delhi: Khalsa Aid has set up Kisan Mall at Tikri border to provide items of daily use for free to farmers.
"We distribute tokens to farmers with which they can procure items from here," says Guru Charan, store manager.(24.12) pic.twitter.com/imZ0Aq1h0O
— ANI (@ANI) December 24, 2020
அதில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அன்றாடம் தேவைப்படும் பால், பிஸ்கட், ரொட்டி, கம்பளி, சானட்டரி பேட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கால்சா மாலில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து பேசிய கால்சா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த குருசரண், "கால்சா தன்னார்வ தொண்டு அமைப்பு மூலம் விவசாயிகளுக்கு டோக்கன்களை வழங்கிவிடுவோம். அந்த டோக்கனுடன் வரும் விவசாயிகளுக்கு தங்களிடம் தற்போது பொருட்களின் பட்டியலை வழங்குவோம். அதில், தங்களுக்கு விருப்பமான பொருட்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்குகிறோம். டூத்பேடஸ்ட், பிஸ்கட், கம்பளி, சானட்டரி நாப்கின் என அனைத்து பொருட்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம்" என்றார்.ஏற்கனவே, திகிரி, சிங்கு உள்ளிட்ட போராட்டம் நடைபெற்று வரும் பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 1500 முதல் 2000 வரையிலான ரொட்டிகளை தயாரிக்கும் இயந்திரத்தை அந்த அமைப்பு நிறுவியுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபடும் வயதான விவசாயிகளுக்கு கால்மசாஜ் சென்டரையும் அமைத்து கொடுத்துள்ளது.
இதற்கிடையே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கிசான் திட்டத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி விடுத்திருந்த அழைப்பை விவசாயிகள் நிராகரித்தனர். அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் போராட்டதை கலைப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், பேச்சுவார்த்தை அரசு அழைப்பதுபோன்றும், அதனை தாங்கள் நிராகரிப்பதுபோன்ற தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.