ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிர்வாண படம் எடுப்பதாக அழைத்து சென்று நரபலி.. விபசார புரோக்கர் கொடூரம்

நிர்வாண படம் எடுப்பதாக அழைத்து சென்று நரபலி.. விபசார புரோக்கர் கொடூரம்

கைதான முகமது ஷபி

கைதான முகமது ஷபி

இரு பெண்களிடமும் முகமது ஷபி தான் ஸ்ரீதேவி என்ற பெயரில் உருவாக்கிய போலி பேஸ்புக் கணக்கை வைத்து அறிமுகமாகியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி ஆசை வார்த்தை பேசி மயக்கி, இரு பெண்களை நரபலி தந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ரோஸ்லினும், செப்டம்பர் மாதத்தில் இருந்து பத்மாவையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது,அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக முகமது ஷபி என்பவரிடம் பேசியிருப்பதும் தெரியவந்தது.இந்த முகமது ஷபியை பிடித்து விசாரித்த போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

  இந்த இரு பெண்களிடமும் முகமது ஷபி தான் 'ஸ்ரீதேவி என்ற பெயரில் உருவாக்கிய போலி பேஸ்புக் கணக்கை வைத்து அறிமுகமாகியுள்ளார். இந்த இரு பெண்களிடமும் நம்பிக்கைக்குரிய நபராக பேசி பழகி அவர்களின் சொந்த விவரங்களை விசாரித்துள்ளார். இரு பெண்களும் லாட்டரி விற்று பிழைத்து வருவாய் சம்பாதிப்பதாக கூறிய நிலையில், அவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்த யோசனை கூறுவதாகக் கூறி ஆபாச படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றுள்ளார். இதன் மூலம் உடனடியாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் எனப் பேசி வலை விரித்துள்ளார்.அவரின் பேச்சை கேட்டு நம்பி அதற்கு சம்மதித்த இரு பெண்களையும் , கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்து நரபலி தந்துள்ளார் ஷபி.

  இதையும் படிங்க: கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் தகராறு.. பாட்டியை கொலை செய்த பேரன்.. 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி

  அவர்களின் உயிர் பிரியும் முன்னதாக அப்பெண்களின் அந்தரங்க உறுப்புகளை கடுமையாக தாக்கி சிதைத்த ஷபி,ஒரு பெண்ணின் உடலை 56 பாகங்களாக வெட்டி புதைத்துள்ளார். இந்த திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை, இவரின் வலையில் வேறு பெண்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Human Sacrifice, Kerala, Murder case