முகப்பு /செய்தி /இந்தியா / அகோரி பூஜைக்கு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை வலுக்கட்டாயமாக எடுத்து விற்ற கொடூரம்.. பகீர் சம்பவம்

அகோரி பூஜைக்கு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை வலுக்கட்டாயமாக எடுத்து விற்ற கொடூரம்.. பகீர் சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இளம்பெண் ஒருவரை அவரது கணவர் வீட்டார் மாந்தீரக பூஜை செய்வதாகக் கூறி கொடுமைபடுத்திய சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பின் கணவர் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் வீட்டார் மாந்தீரக பூஜை போன்ற மூட நம்பிக்கை பழக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அகோரி பூஜை செய்வதாகக் கூறி அந்த பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கடந்தாண்டு இது மேலும் மோசமடைந்துள்ளது.

அந்த பெண்ணை மாதவிடாய் காலத்தில் பட்னி போட்டு, அவரின் மாதவிடாய் ரத்தத்தை வலுக்கட்டாயமாக எடுத்து சென்றுள்ளனர். அதை மந்திரவாதிகளுக்கு ரூ.50,000 விற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இதை பொறுக்கமுடியாமல் கணவர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் தனக்கு நேர்ந்த அவலத்தை காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளார். மாநில மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பெண்ணுக்கு உரிய நீதி வழங்கப்படும் என மாநில அமைச்சர் சந்திரிகாந்த் பாடீல் உறுதி அளித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Maharashtra, Superstition