கரும்பூஞ்சை விட அதிக ஆபத்து நிறைந்த வெள்ளை பூஞ்சை நோய்... இரண்டுக்கும் உண்டான அறிகுறிகள், பாதிப்புகள் என்ன?

கரும்பூஞ்சை நோயை விட அதிக ஆபத்து நிறைந்த வெள்ளை பூஞ்சை நோய், பீகார் மாநிலத்தில் பரவியுள்ளது. இரண்டுக்கும் உண்டான அறிகுறிகள், பாதிப்புகள் என்ன?

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கரும்பூஞ்சை என்ற நோய் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா, ஒடிசா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பீகாரின் பாட்னா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த வெள்ளை பூஞ்சை நோயானது நுரையீரல் தொற்று ஏற்பட காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் பாகங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது இந்த வெள்ளை பூஞ்சை நோய். வெள்ளை பூஞ்சை நோயாளிகளுக்கு கொரோனா போன்ற அறிகுறிகள்தான் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  இதனால் ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும், மெத்தனமாக இருக்கக் கூடாது எனவும், சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொள்பவர்களை எளிதில் தாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் கருதுகின்றனர்.

  இந்த வெள்ளை பூஞ்சை நோய் நுரையீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதே வேளையில், உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதால், இதனை கரும்பூஞ்சை நோயை விட கொடியது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். சுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருப்பதே வெள்ளை பூஞ்சையில் இருந்து தப்பிக்கும் முக்கிய வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  கருப்பு பூஞ்சை ( Black Fungus) என்றால் என்ன?

  இந்த பூஞ்சையானது ஒரு குழுவாக இணைந்த அச்சு வடிவில் உருவாகக்கூடிய மியூகோர்மைகாசிஸ் பூஞ்சையாகும். அழுகிய காய்கறிகள், பழங்கள் என சுற்றுசூழலில் எங்கும் காணக்கூடியது. இந்த மியூகோர்மைகாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், அதிக மருந்து , மாத்திரைகளை உட்கொள்வர்களையே அதிகம் தாக்குகிறது.

  யார் யாரையெல்லாம் பாதிக்கும் ?

  சர்க்கரை நோயாளிகள், அதிக ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வோர், மூச்சுவிட சிரமப்படுவோர், கொரோனாவால் பாதித்தோர், கீமோதெரபி சிகிச்சை பெறுவோர், நீண்ட காலமாக மருந்து , மாத்திரைகள் உட்கொள்வோர், எய்ட்ஸ் நோயாளிகள், போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பாதிக்கும்.

  அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

  இந்த கருப்பு பூஞ்சையான மியூகார்மைகாசிஸ் பாதிக்கப்பட்டால் தலைவலி, முகத்தில் ஆங்காங்கே வலி, சுவாசப்பாதையில் அடைப்பு, கண்பார்வை இழப்பு, கண்களில் வலி, கன்னங்கள் மற்றும் கண்களில் வீக்கம், மூக்கில் கருப்பு மேலோடு போன்ற அறிகுறிகள் இருக்கும். நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் 54 சதவீதம் கருப்பு பூஞ்சையால் இருக்கும் என கணித்துள்ளது.

  எச்சரிக்கை அறிகுறிகளில் கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி வலி மற்றும் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்தக்களரி வாந்தி, மற்றும் மனநிலை மாறுபாடு ஆகியவை அடங்கும்.

  கோவிட் -19 நோயாளிகளில் நீரிழிவு நோயாளிகள் மற்றும் நோயெதிர்ப்பு-குறைபாடு கொண்ட நபர்களிடையே சைனசிடிஸ், ஒரு பக்க முக வலி அல்லது உணர்வின்மை, மூக்கு அல்லது தாடையில் கறுப்பு நிறமாற்றம், பல் வலி, மங்கலான அல்லது வலியுடன் இரட்டை பார்வை இருந்தால், கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளாக இருக்கின்றன. தோல் புண், த்ரோம்போசிஸ், மார்பு வலி மற்றும் மோசமான சுவாச அறிகுறிகளும் இதில் அடங்கும்.

  இந்த நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகள் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஸ்டெராய்டுகளால் நோயெதிர்ப்பு குறைபாடு, நீடித்த ஐ.சி.யூ தங்குதல், வீரியம் மற்றும் வோரிகோனசோல் சிகிச்சை (voriconazole therapy) ஆகியவை அடங்கும் என்று ஐ.சி.எம்.ஆர்-சுகாதார அமைச்சக ஆலோசனை தெரிவித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: