ஹோம் /நியூஸ் /இந்தியா /

உ.பியில் கொரோனா நோயாளிக்கு கருப்பு பூஞ்சை தொற்று

உ.பியில் கொரோனா நோயாளிக்கு கருப்பு பூஞ்சை தொற்று

கறுப்பு பூஞ்சை

கறுப்பு பூஞ்சை

உத்தரபிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

சீனாவில் புதிதாக பரவி வரும் ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகாரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை இந்திய செய்து வருகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளிகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பரவியபோது, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு கருப்பு, வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பிறகு, அதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹர்ஷ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலுள்ள 55 வயது முதியவருக்கு கருப்பு, வெள்ளை பூஞ்சை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர் அமலோற்பவன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இல்லை என்றும் கூறினார். மேலும், அதிகளவு ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொண்டால் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

First published:

Tags: Corona, CoronaVirus