கரும்பூஞ்சை தொற்று- புதிய சவால்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

நாடு முழுவதும் கரும்பூஞ்சை தொற்றால் ஐந்தாயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126 பேர் பலியாகி உள்ளனர். இந்நோய் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்

நாடு முழுவதும் கரும்பூஞ்சை தொற்றால் ஐந்தாயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126 பேர் பலியாகி உள்ளனர். இந்நோய் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்

 • Share this:
  நாடு முழுவதும் கரும்பூஞ்சை தொற்றால் ஐந்தாயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126 பேர் பலியாகி உள்ளனர். இந்நோய் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

  கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்புக்கு மத்தியில், கரும்பூஞ்சை நோய் மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. அதீத சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களை இந்நோய் தாக்குகிறது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த பெரும்பாலோர் கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

  நாடு முழுவதும் கரும்பூஞ்சை நோய்க்கு இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 90 பேரும்,  ஹரியானாவில் 14 பேரும்,  உத்தரபிரதேசத்தில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.  ஜார்க்கண்டில் நான்கு பேரும்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தராகண்டில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர்.  பீகார், ஒடிசா, அசாம், கோவா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கரும்பூஞ்சை நோய்க்கு பலியாகி இருக்கின்றனர்.

  மாநில அளவிலான பாதிப்பை பொறுத்தவரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா ஆயிரத்து 500 பேரும், தெலங்கானாவில் 700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் கரும்பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளன.

  இந்நோயை குணப்படுத்தும் லிபோசோமால் ஆம்போடெரிசின் B ("Liposomal amphotericin B") மருந்துக்கு, பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

  இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில், கரும்பூஞ்சை புதிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

  சீனாவில் சார்ஸ் நோய் ஏற்பட்ட போதும், இதேபோல் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையே, கரும்பூஞ்சை நோயை குணப்படுத்த ஐந்தாயிரம் குப்பி மருந்துகள் வாங்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருந்துகளை வாங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் பணையம்
  Published by:Murugesh M
  First published: