ஹோம் /நியூஸ் /இந்தியா /

நேபாள விமான விபத்து.. வெளியானது கடைசி நேர பரபரப்பு காட்சிகள்!

நேபாள விமான விபத்து.. வெளியானது கடைசி நேர பரபரப்பு காட்சிகள்!

நேபாள விமான விபத்து

நேபாள விமான விபத்து

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்ப கோளாறுகளால் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விமானத்தில் உள்ள காக்பிட் குரல் பதிவு கருவி மற்றும் ஃப்ளைட் தரவு பதிவு கருவிகள் என இரண்டையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா, பிஷால் சர்மா , அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த ஐந்து பேரில் நான்கு பேர் உத்தர பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, முகநூலில் நேரலை செய்த இறுதி காட்சிகள் வெளியாகியுள்ளன.

First published:

Tags: Black Box, Flight Crash, Nepal