பாஜக-வின் ‘ஓட் பேங்க்’, ‘நோட் பேங்க்’ அரசியல்: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தாக்கு

பாஜக-வின் ‘ஓட் பேங்க்’, ‘நோட் பேங்க்’ அரசியல்: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தாக்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

 • Share this:
  மக்களவையில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பாஜகவின் வாக்கு வங்கி அரசியலையும் ‘நோட்டு வங்கி’ அரசியலையும் விமர்சித்தார்.

  பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர், குறிப்பாக விவசாயிகள் போராட்டம் பற்றியும் அரசு கையாளும் விதம் பற்றியும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

  தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், திருமாவளவன் போன்றவர்களும் மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கடுமையாக விமர்சித்தனர்.

  இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல்களை மனதில் வைத்து பட்ஜெட்டில் நெடுஞ்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கபில் சிபல் குற்றம்சாட்டினார்.

  பிறகு தன் ட்விட்டர் பக்கத்தில், அதாவது பட்ஜெட்டில் வாக்கு வங்கி அரசியல் இல்லை என்று மோடிஜி கூறுகிறார் ஆனால் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவுக்கு ஏன் சிறப்புச் சாலைத் திட்டங்கள். பட்ஜெட்டில் ஓட்பேங்க் அரசியல் பட்ஜெட்டுக்கு வெளியே நோட் பேங்க் அரசியல் இல்லையா?” என்று கேலி செய்துள்ளார்.

  அவர் மாநிலங்களவையில் பேசும்போது, “காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்ததாக பா.ஜ., குற்றம்சாட்டியது. இந்தாண்டு தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கி அதையே தான் பா.ஜ.,வும் செய்துள்ளது. 6 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள். இனியும் சாக்கு போக்குகளை ஏற்க முடியாது.

  நாட்டின் வளங்களை நான்கைந்து பெரிய ஆட்களுக்கு அரசு வழங்குகிறது. இது குரோனி கேப்பிடலிஸ்ட்களுடனான நட்புக்கு உதாரணம். குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

  நடப்பு ஆண்டில் முதலீடுகளை விற்கும் இலக்கு 15% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. வேலை இழப்புகளை பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை. கொரோனா சூழலில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். ஆனால் நூறு நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. ரூ.8.55 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் டெலிகாம் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. பி.எம்., கிசான் நிதி ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது”, என்றார்.
  Published by:Muthukumar
  First published: