இஸ்லாமிய பெண்கள் கள்ள ஓட்டு போடுகிறார்கள்? - பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமிய பெண்கள் கள்ள ஓட்டு போடுகிறார்கள்? - பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு
உ.பி. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான்
  • Share this:
இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிந்து வந்து ஓட்டுப் போட்டால் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோருவேன் என்று உத்தரப்பிரதேசம் முசாஃபர்நகர் பாஜக வேட்பாளர் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் முசாஃபர்நகரில் பாஜக சார்பில் சஞ்சீவ் பல்யான் போட்டியிடுகிறார். இவர்  ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தலைவரான அஜித் சிங்-ஐ எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.


பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான் முசாஃபர் நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்துவிட்டு வெளியே வந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிந்து வந்து வாக்களிக்கிறார்கள். அவர்கள் முகத்தை பார்த்து யாரும் சோதனை செய்வதில்லை. அவர்கள் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இதைச் சரிசெய்யவில்லை என்றால், நான் மறுவாக்குபதிவு நடத்த வலியுறுத்துவேன்’’ என்று பேசினார். இவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also see...

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading