பிரதமர் மோடியின் அசுர வேக தேர்தல் பிரச்சாரம்: 48 மணிநேரத்தில் 5,000 கிமீ தூரத்தை கவர் செய்தார்!

பிரதமர் மோடியின் அசுர வேக தேர்தல் பிரச்சாரம்: 48 மணிநேரத்தில் 5,000 கிமீ தூரத்தை கவர் செய்தார்!

பிரதமர் மோடி

5 மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னணி தேர்தல் பிரச்சாரகராக இருக்கும் பிரதமர் மோடி, 48 மணி நேரத்தில் 4 மாநிலங்களில் சுமார் 5000 கிமீ தூரம் பயணித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  • Share this:
நாட்டின் பிரதமராக இருந்தாலும் கூட தனது 70வது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் பிரதமர் மோடி. 7 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்தாலும் கூட விழா மற்றும் முக்கிய நாட்களில் கூட அவர் பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பதை பார்க்க முடியும். உதாரணமாக ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் அவர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஜனநாயக திருவிழாவான தேர்தலிலும் பிரதமர் மோடி தனக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்யக்கூடியவர். அது பஞ்சாயத்து தேர்தல் என்றாலும் சரி பாராளுமன்ற தேர்தல் என்றாலும் சரி.. நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அசாமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி


அதே நேரத்தில் பாஜகவை பொறுத்தவரை மிக முக்கிய தேர்தல் களம் என்றால் அது மேற்குவங்கம் தான். ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி முதல் முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரம் காட்டியுள்ளது. இதே போல பாண்டிச்சேரியிலும் பாஜக அதன் கூட்டணி ஆட்சியை கொண்டுவர முயன்றுள்ளது. தமிழகம், கேரளாவில் தனது இருப்பை காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறது. இப்படியான அரசியல் சூழலில் பாஜகவின் ஸ்டார் பிரச்சாரகரான பிரதமர் மோடி சற்றும் ஓய்வில்லாமல் 48 மணி நேரத்தில் 5000 கிமீ பயணித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம் அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு மதுரைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோவிலில் முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து இன்று மதுரை, நாகர்கோவிலில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதனை முடித்துக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.கேரளாவிலிருந்து புறப்பட்டு நாளை அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு தமுல்பூரில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அங்கிருந்து மேற்குவங்கம் சென்று தாரகேஷ்வர் மற்றும் சோனார்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இரு தினங்களில் பிரதமர் மோடி 5000 கிமீ தூரம் பயணித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் இதுவரை 20 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பரப்புரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: