ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் - பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

CT Ravi - Owaisi

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியை, சி.டி.ரவி, தாலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

  • Share this:
ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியின் தாலிபான்கள் போன்றவர்கள் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி, ஹுபாலி தர்வாத் மற்றும் பெலாகவி மாநகராட்சி தேர்தல்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு வரும் செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் செப்டம்பர் 6ம் தேதி அறிவிக்கப்படும். கர்நாட்காவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மைக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. அவருடைய புதிய தலைமையின் கீழ் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த தேர்தலில் அவர் பாஜகவுக்கு சாதகமான முடிவை பெற்றுத்தருவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நடைபெறும் பகுதி வடக்கு கர்நாடக பகுதியாகும், இங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பெரிய ஆதரவு இல்லாததால் இத்தேர்தல் முழுக்க முழுக்க பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலானது.

இதனிடையே கல்புர்கி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு சென்ற பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியிடம் கல்புர்கியில் ஓவைசி கட்சியின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ஓவைசி கட்சி, கர்நாடகாவின் தாலிபான்கள் போன்றவர்கள்.

தாலிபான்கள், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்றவர்களின் விஷயம் எல்லாமே ஒன்றுதான். தாலிபான்கள் கல்புர்கியில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள்.” என தெரிவித்தார்.

Also read: காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியை, சி.டி.ரவி, தாலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.டி.ரவியின் கருத்து குறித்து அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி கூறுகையில், “சி.டி.ரவி ஒரு குழந்தை, அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாலிபான்களுக்கு பாஜக தடை விதிப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
Published by:Arun
First published: