Home /News /national /

யோகி ஆதித்யநாத் அரசின் முடிவிற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது - அகிலேஷ் யாதவ்

யோகி ஆதித்யநாத் அரசின் முடிவிற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

2022-ல் நிலையான ஆட்சியை அமைத்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கனவுகளை நனவாக்க, அவர்கள் வழியில் நடப்போம்.

  • Last Updated :
    உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் முடிவிற்கான பின்னோக்கிய கவுன்டவுன் தொடங்கிவிட்டதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உ.பி.-ன் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘‘ உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய அரசின் கவுன்டவுன் தொடங்கிவிட்டது. 2022-ம் ஆண்டு உ.பி. சட்டசபைத் தேர்தலில் நிலையான ஆட்சியை அமைத்து, தலைசிறந்த தலைவர்களான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கனவுகளை நனவாக்க, அவர்கள் வழியில் நடப்போம்.

    மாநிலத்தில் ஏழை மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். உ.பி. அரசு தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டில் வாழும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள், அதுதான் இந்தியாவின் தனித்தன்மை. இந்த நல்லிணக்கம் தொடர வேண்டும்’’.

    சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம் கான் மீது காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் குறித்து அகிலேஷ் யாதவ் பேசும்போது, ‘‘ஆசம் கான் மீது காவல்துறையில் புகார் அளித்தவர்கள் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தார்கள். இப்போது ஏன் புகார் அளிக்க வேண்டும். ஆசம் கான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கி குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்ததாலா அவர் மீது 80 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டன?’’ என்று அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பினார்.

    Published by:Ilavarasan M
    First published:

    Tags: Akilesh yadav, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி