திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 112 இடங்களில் ஆளும் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதற்குக் காரணம் பாஜக குண்டர்கள் வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைக்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கடும் குற்றம்சாட்டியுள்ளார்.
திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அகர்தலா மாநகராட்சி (51 வார்டுகள்), 13 நகராட்சிகள் மற்றும் 6 நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 36 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்பாசா, மோகன்பூர், ரானிர் பஜார், பிஷால்கர், உதய்பூர், சாந்திர் பஜார் ஆகிய 6 நகராட்சி கள் மற்றும் ஜிரானியா நகர பஞ்சாயத்தில் எதிர்க்கட்சி வேட் பாளர்கள் எவரும் களத்தில் இல்லை.
இந்நிலையில் 112 இடங்களில் ஆளும் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 222 இடங்களுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இம்மாநிலத்தில் 2018-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும்.
அம்பாசா முனிசிபல் கவுன்சில், ஜிரானியா நகரப் பஞ்சாயத்து, மோகன்பூர் முனிசிபல் கவுன்சில், ராணிபஜார் முனிசிபல் கவுன்சில் பிஷால்கர் முனிசிபல் கவுன்சில், உதய்பூர் முனிசிபல் கவுன்சில், சாந்திர்பஜார் முனிசிபல் கவுன்சில் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்க்கட்சியினரே இல்லை.
இந்த உள்ளாட்சி தேர்தலில் திரிபுராவில் 5,94,772, இதில் நகர்ப்புறப் பகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்.
தங்களது ஆட்சிப்பரப்பை விஸ்தீரணம் செய்ய முயன்று வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Local Body Election 2021, Tripura