ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் மக்கள் மூன்றாவது அணிக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்ததில்லை - நியூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா பேச்சு

குஜராத் மக்கள் மூன்றாவது அணிக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்ததில்லை - நியூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா பேச்சு

மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா

ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசிய அவர், ”இதுவரை குஜராத் மக்கள் மூன்றாவது அணிக்கு எப்போதும் தங்களின் ஆதரவை தெரிவித்ததில்லை” என கூறினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

    குஜராத் மக்களின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்கு இருப்பதாகவும் நடக்கவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு தொகுதிகளை வென்று புதிய சாதனையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

    குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் நியூஸ்18 குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் “குஜராத் ஆதிவேஷன்” என்ற கலந்துரையாடல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,  குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு தொகுதிகளை வென்று புதிய சாதனையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், ஒரு வலிமையான அரசை வைத்து பல ஆண்டுகளாக நாங்கள் செய்வதை போல குஜராத்தை ஒரு பாதுகாப்பான, படித்த முன்னேறிய மாநிலமாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

    இதையும் படிக்க : குஜராத்தில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - அமித் ஷா நம்பிக்கை

    மேலும், குஜராத் மக்களின் முழு ஆசிர்வாதமும் பாஜக கட்சிக்கு இருக்கிறது. இதுவரை குஜராத் மாநிலத்திற்காக இதுவரை எதையும் பாஜக செய்யாமல் இருந்ததில்லை. மக்களின் எதிர்ப்பார்ப்புகளை ஈடு செய்யும் அனைத்தையும் பாஜக அரசு செய்திருக்கிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசிய அவர், இதுவரை குஜராத் மக்கள் மூன்றாவது அணிக்கு எப்போதும் தங்களின் ஆதரவை தெரிவித்ததில்லை. மேலும், குஜராத் மக்கள் அனைவரின் கருத்தையும் கேட்பார்கள். பிறர் சொல்வதை கேட்டு அவர்கள் முடிவெடுத்தார்கள் என்று கூறினால், இப்போது நான் எதுவும் சொல்லவில்லை. தேர்தல் முடிவுகளே உங்களுக்கு விடையை கொடுக்கும் என தெரிவித்தார்.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Amit Shah, Amit Shah To News 18, Assembly Election 2022, Gujarat, News 18