மஹாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி! நியூஸ் 18 கருத்துக் கணிப்பு

மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 243 தொகுதிகளிலும் வெற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி! நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
மஹாராஷ்டிரா
  • News18
  • Last Updated: October 21, 2019, 6:52 PM IST
  • Share this:
மஹாராஷ்டிரா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு 243 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 41 இடங்களும் கிடைக்கும் என்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹரியானாவிலும் பா.ஜ.க கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. இரண்டு மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், தேவேந்திரநாத் பட்னவிஸ் தலைமையில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது.


அதேபோல, ஹரியானாவில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுகிறது. இன்று வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சி மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 243 தொகுதிகளிலும் வெற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹரியானாவிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading