எங்கள் வீட்டிலிருக்கும் மகள்களும், மருமகள்களும் நிலக்கரி திருடர்களா? - மம்தா பானர்ஜி ஆவேசம்..

எங்கள் வீட்டிலிருக்கும் மகள்களும், மருமகள்களும் நிலக்கரி திருடர்களா? - மம்தா பானர்ஜி ஆவேசம்..

மம்தா பானர்ஜி

வீட்டுக்குள் நுழைந்து 22-23 வயது மகள்களையும், மருமகள்களையும் குறிவைத்து விசாரிக்கிறார்கள். அவர்கள் நிலக்கரி திருடர்களா? நிலக்கரி திருடர்களுடன் தொடர்பில் இருக்கும் நீங்கள் யார்? என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 • Share this:
  மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  மம்தா பானர்ஜி பேசுகையில், ‘’பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரராக இருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்து 22-23 வயது மகள்களையும், மருமகள்களையும் குறிவைத்து விசாரிக்கிறார்கள். அவர்கள் நிலக்கரி திருடர்களா? நிலக்கரி திருடர்களுடன் தொடர்பில் இருக்கும் நீங்கள் யார்? என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

  பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பில்லை. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பெண்கள் சகோதரிகளாகவும், தாயாகவும் மதிக்கப்படுபவர்கள் என்றார்.

  இந்த சட்டசபை தேர்தலில் நான் கோல் கீப்பராக செயல்படுவேன். பா.ஜ.க.வால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த பந்தும் கோல் கம்பத்தை தொடாது. நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது குறிப்பிடத்தகுந்தது.
  Published by:Gunavathy
  First published: