மேற்கு வங்கம் மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தில் தவறில்லை: பாஜக தலைவர்!

திலீப் கோஷ்

தற்போது ஜங்கல் மஹால் அல்லது வடக்கு வங்காளம் தனியாக பிரிந்து செல்ல விரும்பினால் அதற்கு முழு காரணம் மம்தா பானர்ஜிதான். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனபோதிலும் வடக்கு வங்காளம் ஏன்  வளர்ச்சிகள் இல்லாமல் உள்ளது என்று திலீப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  மேற்கு வங்கம் மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்  ஜான் பார்லா கூறிய நிலையில், மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜான்பார்லா தற்போது சிறுபான்மை விவகாரங்கள் துறையின் மாநிலங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ளார்.  மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு மாவட்டங்கள் வளர்ச்சியடையாமல் உள்ளதாகவும் எனவே வடக்கு மேற்கு வங்கத்தை தனி மாநிலமாகவே அல்லது யூனியன் பிரதேசமாகவே பிரிக்க வேண்டும் என்று ஜார் பார்லா கடந்த ஜூன் மாதம் கருத்து தெரிவித்திருந்தார். இதேபோல், பாஜகவைச் சேர்ந்த எம்.பி.யான  சவுமித்ரா கான், ஜங்கல் மஹாலை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற பாஜகவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் அடங்கிபோனது. இந்நிலையில்,  வடக்கு வங்காள மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷிடம் ஜான் பார்லாவின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளித்த திலீப் கோஷ், “ அவர் அப்படி ஒரு கோரிக்கையை எழுப்பியிருந்தால் அதில் தவறு இல்லை. மக்கள் பிரிதிநிதி என்பதால் தனக்கு வாக்களித்தவர்களின் கோரிக்கைக்கு செவி மடுப்பது அவரது கடமை. எனவே, தனக்கு வாக்களித்தவர்களுக்கு ஆதரவாக இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்து ஒன்றும் சட்டவிரோதம் அல்ல” என்று கூறினார்.

  இதையும் படிங்க: கொரோனா பரவல்- செப்டம்பருக்குள் செய்யுங்கள்: நிதி ஆயோக் வழங்கிய முக்கிய பரிந்துரை!


  மேலும், தற்போது ஜங்கல் மஹால் அல்லது வடக்கு வங்காளம் தனியாக பிரிந்து செல்ல விரும்பினால் அதற்கு முழு காரணம் மம்தா பானர்ஜிதான். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனபோதிலும் வடக்கு வங்காளம் ஏன்  வளர்ச்சிகள் இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ளவர்கள் எதற்காக கல்விக்காவும், வேலைக்காகவும் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  திலீப் கோஷின் இந்த கருத்துக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து  சேகர் ரே, “சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த பின்,  வங்கத்தைப் பிரிக்க விரும்புபவர்களை பாஜக ஊக்குவித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: ஆப்கானிஸ்தானிலிருந்து இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மீட்பு: மீதமுள்ளவர்களை விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா

  Published by:Murugesh M
  First published: