ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை மீண்டும் முடக்க வேண்டும் - பாஜக

ஜே.பி. நட்டா

ராகுல் காந்தியின் அரசியல் கணக்கை நாட்டு மக்கள் ஏற்கனவே முடக்கி விட்டனர்.

 • Share this:
  ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை மீண்டும் முடக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

  பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ட்விட்டர் பதிவில், டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

  ஆனால், அதை அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை மீண்டும் முடக்க வேண்டும். அவரது அரசியல் கணக்கை நாட்டு மக்கள் ஏற்கனவே முடக்கி விட்டனர். அதுபோல் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட வேண்டும். ராகுல் காந்தி பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டவர். அவரது நம்பகத்தன்மை போய்விட்டது.” இவ்வாறு கூறியுள்ளார்.

  இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசினார்.

  அப்போது அவர் பேசுகையில், “ராகுல் காந்தியின் அரசியல் சுற்றுலா தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அவர் அமேதியில் தோற்று விட்டார். எனவேதான், கேளராவின் வயநாடுக்கு ஓடிவிட்டார். மாநிலத்தை மாற்றுவதால், ஒருவரின் நடத்தையோ, உள்நோக்கமோ மாறிவிடப் போவதில்லை.

  ராகுல் காந்தி


  Must Read : கொரோனா 3வது அலை - முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு

  டெல்லியில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தை ராகுல் காந்தி அரசியலாக்கி வருகிறார். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரச்சினைகளை அரசியலாக்குவது சரியல்ல.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமான பாதிப்பில் 50 சதவீதம், கேரளாவில் ஏற்பட்டு வருகிறது. இந்த கேரள மாடல், மோசமான நிர்வாகத்துக்கான மாடல்.” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: